search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உளுந்தூர்பேட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து 5 மாணவர்கள் படுகாயம்
    X

    விபத்துக்குள்ளான ஆட்டோவில் பயணம் செய்து காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அமர்ந்திருந்தபோது எடுத்தபடம்.

    உளுந்தூர்பேட்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து 5 மாணவர்கள் படுகாயம்

    • இந்த ஆட்டோவை அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவர் ஓட்டி சென்றார்.
    • உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அருகே வைப்பாளையத்தை சேர்ந்த மாணவர்கள், கெடிலத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு தினமும் ஆட்டோவில் சென்று வருவது வழக்கம். அதன்படி இன்று காலை அப்பகுதியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆட்டோவில் ஏறி பள்ளிக்கு புறப்பட்டனர். இந்த ஆட்டோவை அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் (வயது 38) என்பவர் ஓட்டி சென்றார். இந்த ஆட்டோ பள்ளி அருகே சென்ற போது, சாலையில் இருந்த பள்ளத் தில் விழுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மாண வர்களின் அலறல் சத்தம் கேட்டு அவ்வழியே சென்றவர்கள் பதறிப்போய், மாணவர்களையும் ஆட்டோ டிரைவரையும் மீட்டனர்.

    இதில் டிரைவர், 5 மாணவர்கள் காயமடைந்த னர். அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநாவலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக உளுந்தூர்பே பேட்டை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் திருநாவ லூர் இன்ஸ்பெக்டர் அசோ கன், சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வரு கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×