search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலுக்கு 5  அறங்காவலர்கள்  நியமனம்
    X

    சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோவிலுக்கு 5 அறங்காவலர்கள் நியமனம்

    • சங்கர நாராயணசுவாமி கோவில் அறங்காவலர்களாக பெண் உட்பட 5 பேரை இந்து சமய அறநிலையத்துறை நியமித்து உத்தரவிட்டுள்ளது.
    • 5 பேரில் ஒருவர் அறங்காவலர் குழுத் தலைவராக 30 நாட்களுக்குள் தேர்வு செய்யப்பட வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சங்கர நாராயணசுவாமி கோவில் அறங்காவலர்களாக ஒரு பெண் உட்பட 5 பேரை இந்து சமய அறநிலையத்துறை நியமித்து உத்தரவிட்டுள்ளது.

    சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த வக்கீல் சண்முகையா, காந்திநகர் 2-வது தெருவை சேர்ந்த முப்பிடாதி, சங்குபுரம் 3-வது தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன், முள்ளிகுளம் மேலத்தெருவை சேர்ந்த வெள்ளைச்சாமி, கோமதியாபுரம் 6-வது தெருவை சேர்ந்த முத்துலெட்சுமி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் நியமனம் செய்யப்பட்ட 5 அறங்காவலர்களில் ஒருவர் அறங்காவலர் குழுத் தலைவராக 30 நாட்களுக்குள் தேர்வு செய்யப்பட வேண்டும். அதன் பிறகே கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் யார் என்பது தெரியவரும்.

    Next Story
    ×