என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
பல்லடம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேர் கைது
By
மாலை மலர்13 Feb 2023 1:45 PM IST

- பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் நாதேகவுண்டம்பாளையத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கே 7 பேர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. அவர்களை சுற்றி வளைத்து கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரொக்கம் ரூ.44 ஆயிரத்து 400 பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் அவர்கள் நாதே கவுண்டம்பாளையத்தை சேர்ந்த ரங்கசாமி ( வயது 60), அதே ஊரைச் சேர்ந்த திருமூர்த்தி (39), மாயவன் (36 ), சரண்குமார் (19 ), துத்தாரி பாளையத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (50), கள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த அரவிந்த்குமார் (26), கழுவேறி பாளையத்தை சேர்ந்த சிவா(29) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
×
X