என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலத்தில் அடுத்த மாதம் 7-ந்தேதிஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்

- கலெக்டர் அலுவலகத்தில் வருகிற ஜூன் மாதம் 7-ந்தேதி( புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.
- கலெக்டர் கார்மேகம் தலைமையிலும், சென்னை ஓய்வூதிய இயக்கு நரக அரசு கூடுதல் செயலாளர், நிதித்துறை இயக்குநர் முன்னிலையிலும் நடக்கிறது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் பணி புரிந்து ஓய்வுபெற்ற அரசு அலுவலர்களின் ஓய்வூதியப் பலன்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவதில் ஏதேனும் குறை கள் இருப்பின் அதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு, மாவட்ட கலெக்டர் அலுவல கத்தில் வருகிற ஜூன் மாதம் 7-ந்தேதி( புதன்கிழமை) காலை 10.30 மணியளவில் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டம் கலெக்டர் கார்மேகம் தலைமையிலும், சென்னை ஓய்வூதிய இயக்கு நரக அரசு கூடுதல் செயலா ளர், நிதித்துறை இயக்குநர் முன்னிலையிலும் நடக்கிறது.
எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் பணிபு ரிந்து ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் தங்களது ஓய்வூதிய பலன்கள் குறித்து ஏதேனும் குறைகள் இருப்பின் தங்களது முறை யீட்டு மனுக்களை 2 பிரதிக ளுடன் வருகிற 30-ந்தேதி (செவ்வாய்கிழமை) மாலை 5 மணிக்குள் மாவட்ட கலெக்டர் அலுவலக முதல் தளத்தில் உள்ள கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் (கணக்குகள்) நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் கார்மே கம் தெரிவித்துள்ளார்.