என் மலர்
உள்ளூர் செய்திகள்

தண்ணீர் குடிக்க குடத்திற்குள் தலைவிட்டு மாட்டி கொண்ட நாயை தீயணைப்புவீரர்கள் மீட்கும் காட்சி.
உளுந்தூர்பேட்டை அருகே தண்ணீர் குடிக்க குடத்திற்குள் தலைவிட்டு மாட்டிகொண்ட நாய்
- நாய் சில்வர் குடத்தில் தலையை விட்ட போது எதிர்பாராத விதமாக தலை குடத்திற்குள் சிக்கி மாட்டிக்கொண்டது
- தீயணைப்பு நிலைய வீரர்கள் குடத்திற்குள் தலை மாட்டிய நாயை போராடி பத்திரமாக மீட்டனர்.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை அண்ணா சத்யா தெருவை சேர்ந்தவர் கோபால கிருஷ்ணன். இவர் தனது வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இதற்கிடையே அந்த நாய் நேற்று இரவு தண்ணீர் குடிப்பதற்காக அவரது வீட்டு தோட்டத்தில் இருந்த சில்வர் குடத்தில் தலையை விட்ட போது எதிர்பாராத விதமாக தலை குடத்திற்குள் சிக்கி மாட்டிக்கொண்டது.
பின்னர் நாயின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த கோபாலகிருஷ்ணன் இது குறித்து உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவல் அறிந்து வந்த தீய ணைப்பு நிலைய வீரர்கள் குடத்திற்குள் தலை மாட்டிய நாயை போராடி பத்திரமாக மீட்டனர். நாயை மீட்க தீயணைப்பு வீரர்கள் போராடிய காட்சி தற்போது இணையத்தில் வைரலாக பரவுகிறது.
Next Story