என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாய்களை விஷம் வைத்து கொல்லும் கும்பல்
- இரவில் ஆடு, கோழிகள் மர்ம நபர்களால் திருடு போகிறது என மக்கள் கூறுகின்றனர்.
- திருடும் முயற்சிக்கு நாய்கள், இடையூறாக இருப்பதால் தான் அவற்றை விஷம் வைத்து கொல்ல மர்ம நபர்கள் முற்பட்டுள்ளனர் .
அவிநாசி :
அவிநாசி ஊராட்சி ஒன்றியம் சேவூர் அருகேயுள்ள போத்தம்பாளையம் பகுதியில் ஆடு கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். சில மாதங்களாக இரவில் ஆடு, கோழிகள் மர்ம நபர்களால் திருடு போகிறது என மக்கள் கூறுகின்றனர்.
சம்பவத்தன்று அங்கு நாய்க்கு கோழிக்கழிவில் சிலர் விஷம் வைத்து விட்டு சென்றதாகவும், அதை உண்ட 3 நாய்களில் 2 நாய்கள் இறந்துவிட்டது எனவும் அப்பகுதி மக்கள் கூறினர். ஆடு, கோழிகளை திருடுவதற்கு வரும் நபர்களை வீடுகளில் வளர்க்கப்படும் நாய்கள் துரத்துவதாலும், தங்களின் திருடும் முயற்சிக்கு நாய்கள், இடையூறாக இருப்பதால் தான் அவற்றை விஷம் வைத்து கொல்ல மர்ம நபர்கள் முற்பட்டுள்ளனர் எனவும் மக்கள் கூறினர். இதுதொடர்பாக கர்ணன், ராஜசேகர், ராஜேஷ்குமார் ஆகியோர் சேவூர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு வழங்கினர்.
Next Story