என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![மேல்மலையனூரில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அரசு ஊழியர் சாவு மேல்மலையனூரில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அரசு ஊழியர் சாவு](https://media.maalaimalar.com/h-upload/2022/08/07/1742351-arasu-oozhiyar-death.jpg)
X
ராஜாமணி
மேல்மலையனூரில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அரசு ஊழியர் சாவு
By
மாலை மலர்7 Aug 2022 11:48 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மேல்மலையனூரில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த அரசு ஊழியர் பலியானார்.
- கடந்த 3-ந் தேதி அலுவலகத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜாமணி (வயது 57) மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம நல அலுவலராக பணிபுரிந்து வந்தார். கடந்த 3-ந் தேதி அலுவலகத்துக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாரதவிதமாக சாலை ஓரத்திலிருந்த சிமெண்ட் கட்டை மீது மோதியது. இதில் படுகாயமடைந்த ராஜமணியை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.பின்பு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ராஜாமணி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X