என் மலர்
உள்ளூர் செய்திகள்
திண்டிவனம் அருகே லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது; 2 பேர் காயம்
- பார்த்திபனும் பிளம்பர் வேலை செய்து வருகின்றனர்.
- முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த சத்தியமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தேவா (வயது 19). இவரும் இவரது நண்பர் பார்த்திபனும் பிளம்பர் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் வேலையை முடித்துவிட்டு புதுவையில் இருந்து செஞ்சி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மரக்காணம் சாலையில் வரும்போது முன்னாள் சென்ற லாரி மீது இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தேவா படு காயங்களுடன் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் அவருடன் வந்த பார்த்திபன் சிறு காயங்களுடன் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் லாரியை நடுரோட்டில் விட்டுவிட்டு டிரைவர் தப்பிச் சென்றதால் நடுரோட்டில் நின்ற லாரியால் சென்னை-புதுவை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திண்டிவனம் போலீசார் போக்குவரத்தை சரி செய்து விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.