என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
உளுந்தூர்பேட்டை அருகே போலீஸ் நிலையத்திற்குள் புகுந்த சாரை பாம்பு
Byமாலை மலர்13 July 2023 3:16 PM IST
- உளுந்தூர்பேட்டை யிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் உள்ளது போக்குவரத்து போலீஸ் நிலையம்.
- 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று போலீஸ் நிலையத்திற்குள் புகுந்தது.
கள்ளக்குறிச்சி:
உளுந்தூர்பேட்டை யிலிருந்து திருச்சி செல்லும் சாலையில் உள்ளது போக்குவரத்து போலீஸ் நிலையம். இந்நிலையில் இன்று காலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் போலீஸ் நிலையத்திலிருந்து அலுவலக பணி காரணமாக வெளியில் சென்றனர். அப்போது 5 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று போலீஸ் நிலையத்திற்குள் புகுந்தது. அப்போது பணியில் இருந்த போலீசார் இதனை பார்த்து உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 5 அடி நீள சாரை பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
Next Story
×
X