என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![தரம் உயர்த்த வேண்டிய பள்ளிகள் குறித்த கணக்கெடுக்கும் பணி தொடங்கியது - புதிய பள்ளிகள் தொடங்கவும் நடவடிக்கை தரம் உயர்த்த வேண்டிய பள்ளிகள் குறித்த கணக்கெடுக்கும் பணி தொடங்கியது - புதிய பள்ளிகள் தொடங்கவும் நடவடிக்கை](https://media.maalaimalar.com/h-upload/2023/02/08/1832911-untitled-1.webp)
தரம் உயர்த்த வேண்டிய பள்ளிகள் குறித்த கணக்கெடுக்கும் பணி தொடங்கியது - புதிய பள்ளிகள் தொடங்கவும் நடவடிக்கை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
- மாணவர் எண்ணிக்கை அடிப்படையாக கொண்டு புதிய பள்ளிகள் துவங்குவது குறித்து முடிவெடுக்கப்படும்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில், 2023 - 24 ம் கல்வியாண்டில் துவக்க பள்ளிகள் துவங்கும் பகுதிகள், நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர உள்ள பள்ளிகள், குறித்த பட்டியல் தயாரிக்கும் பணி துவங்கியுள்ளது.
வரும் கல்வியாண்டில் புதியதாக பள்ளிகள் துவங்க வேண்டிய பகுதிகள், நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டிய பள்ளிகள் குறித்த விபரங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் சேகரித்து, பட்டியல் தயாரிக்க வேண்டுமென, தொடக்கக் கல்வி இயக்குனரகம், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதன் தொடர்ச்சியாக திருப்பூர், தாராபுரம், உடுமலை கல்வி மாவட்டத்தில் தொடக்க கல்வி அளவில் பணிகள் துவங்கியுள்ளது. மொத்தமுள்ள பள்ளிகள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்கள், 6முதல் 8-ம் வகுப்பு வரை படிப்போர் விபரம் சேகரிக்கப்படுகிறது. ஒரு பள்ளி அதன் அருகே உள்ள மற்றொரு பள்ளி (கி.மீ., அளவில்) விபரமும் சேர்க்கப்படுகிறது.
இது குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அமுதாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- ஒவ்வொரு தாலுகாவில் தரம் உயர்த்த வேண்டிய பள்ளிகள் குறித்த விபரம் கேட்கப்பட்டுள்ளது. பள்ளி பொறுப்பாளர்களின் விண்ணப்பம் அளிக்கப்பட்டு வருகிறது. மாணவர் எண்ணிக்கை, மக்கள் தொகை உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு புதிய பள்ளிகள் துவங்குவது குறித்து முடிவெடுக்கப்படும். தற்போதைக்கு முதல்கட்ட பணி துவங்கியுள்ளது என்றார்.