என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசாரை படத்தில் காணலாம்.
திண்டிவனம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது
By
மாலை மலர்22 Nov 2022 12:56 PM IST

- சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
- இந்த பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது.
விழுப்புரம்:
திண்டிவனம் அருகே ஆத்தூர் ஏரிக்கரைப்பகுதியில்பிரம்மதேசம் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்தப் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். பின்பு அவரை சோதனை செய்தபோது அவர் கஞ்சா வைத்திருப்பது தெரிய வந்தது.
மேலும் அவரிடம் விசாரணை செய்தபோது அவர் ஓமந்தூர் கிராமத்தைச் சேர்ந்தமுரளி என்பதும் இவர் இந்த பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரிய வந்தது. இவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
X