என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![உளுந்தூர்பேட்டை அருகே ரேசன் அரிசி கடத்திய வாகனம் பறிமுதல் உளுந்தூர்பேட்டை அருகே ரேசன் அரிசி கடத்திய வாகனம் பறிமுதல்](https://media.maalaimalar.com/h-upload/2022/10/08/1773577-parimudhal.jpg)
X
உளுந்தூர்பேட்டை அருகே ரேசன் அரிசி கடத்திய வாகனம் பறிமுதல்
By
மாலை மலர்8 Oct 2022 2:49 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- உளுந்தூர்பேட்டை அருகே ரேசன் அரிசி கடத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
- வாகனத்தில் 2 டன் அரிசிக்கு மேல் உள்ளது என தெரிய வந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுக்கா ஆதனூர் கிராமத்தில் இருந்து ரேசன் அரிசி கடத்திக் கொண்டு வருவதாக உளுந்தூர்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் இன்ஸ்பெக்டர் அருள்செல்வம் மற்றும்போலீசார் விரைந்துசென்றனர்.
அப்போது வாகனத்தை மடக்கிப்பிடித்து உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் கொண்டு வந்து விழுப்புரம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவில் ஒப்படைக்கப்பட்டது. வாகனத்தை ஓட்டி வந்தவர் பெரம்பலூர் மாவட்டம் கீரனூர் குன்னம் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் குறிப்பிடத்தக்கதாகும். வாகனத்தில் 2 டன் அரிசிக்கு மேல் உள்ளது என தெரிய வந்தது.
Next Story
×
X