என் மலர்
உள்ளூர் செய்திகள்
பெரியகுளத்தில் பள்ளியில் புகுந்து ஆசிரியைகளை பிளேடால் கிழித்த வாலிபர்
- ஆசிரியைக்கும் அவரது கணவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.
- இந்நிலையில் மது போதையில் வந்த கணவர் அவரது மனையின் பள்ளிக்குள் நுழைந்து அவரை சரமாரியாக பிளேடால் கிழித்துள்ளார்.
பெரியகுளம்:
பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 2வது வார்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த பிரியங்கா என்பவர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். பிரியங்காவுக்கும் அவரது கணவர் ரமேஷுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மது போதையில் வந்த ரமேஷ் மனைவி பிரியங்கா பணிபுரியும் தனியார் பள்ளிக்குள் நுழைந்து அவரை சரமாரியாக பிளேடால் கிழித்துள்ளார். அப்போது அங்கே இருந்த சக பெண் ஆசிரியர் தடுக்க முற்பட்டபோது அவரையும் பிளேடால் கிழித்துள்ளார். இதனைப் பார்த்த பள்ளி குழந்தைகள் அலறி அடித்து பள்ளி வகுப்பறைக்குள் அங்கு மிங்கும் ஓடி கூச்சலிட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் ரமேசை கைது செய்து பெரியகுளம் வடகரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் காயமடைந்த பிரியங்கா மற்றும் சக ஆசிரியை சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்க ப்பட்டுள்ளனர். ரமேஷ் மனை வியின் தாய் வீட்டிற்கு சென்று பிரியங்காவின் தாயை தாக்க முற்பட்டபோது தடுக்க வந்த நபரையும் தாக்கியதாக தென்கரை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.