என் மலர்
உள்ளூர் செய்திகள்

பாவூர்சத்திரம் அருகே வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் படுகாயம்
- பரமசிவன் தென்காசி- நெல்லை நான்கு வழிச்சாலையில் தனது மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- வேன் மீது பரமசிவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.
தென்காசி:
பாவூர்சத்திரம் அருகே உள்ள குலசேகரபட்டி கிராமத்தைச் சேர்ந்த பரமசிவன் (வயது 23). இவர் நேற்று இரவு பாவூர்சத்திரம் செல்வ விநாயகர்புரம் அருகே தென்காசி- நெல்லை நான்கு வழிச்சாலையில் தனது மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது நெல்லை மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் வேனில் தென்காசி சென்று விட்டு மீண்டும் தங்களின் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்வ விநாயகர் புரம் அருகே அவர்கள் வந்த வேன் மீது பரமசிவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த பரமசிவத்தை உடனடியாக சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து பாவூர்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story