என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
வானூர் அருகே இளம் பெண்ணை கடத்திய வாலிபர் போக்சோவில் கைது
By
மாலை மலர்1 April 2023 2:32 PM IST

- வானூர் அருகே இளம் பெண்ணை கடத்தி சென்ற வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
- இந்நிலையில் கம்பெனியில் வேலை செய்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ராஜேஷ் அந்தப் பெண்ணை கடத்திச் சென்றுள்ளார்.
விழுப்புரம்:
வானூர் அருகே இளம் பெண்ணை கடத்தி சென்ற வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார் விழுப்புரம் மாவட்டம் ரக்காணம் அருகே உள்ள ஆலப்பாக்கம் பகுதியில் ஏராளமான இறால் பண்ணைகள் உள்ளது . இங்கு ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 33) வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கம்பெனியில் வேலை செய்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ராஜேஷ் அந்தப் பெண்ணை கடத்திச் சென்றுள்ளார் இந்நிலையில் வேலைக்கு சென்ற தனது மகளைக் காணவில்லை என பெண்ணின் தாய் கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்- இன்ஸ்சுபெக்டர் சுகன்யா வழக்கு பதிவு செய்து வாலிபர் ராஜேசை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
X