என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி வார வழிபாடு குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி வார வழிபாடு](https://media.maalaimalar.com/h-upload/2022/07/19/1731853-sani.jpg)
X
கோப்பு படம்
குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி வார வழிபாடு
By
மாலை மலர்19 July 2022 12:01 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- தேனி மாவட்டம் குச்சனூரில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சுயம்பு சனீஸ்வரர் பகவான் கோவில்
- ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் வாரத்திருவிழா நடைபெறும்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் குச்சனூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சுயம்பு சனீஸ்வரர் பகவான் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில்வ ரும் சனிக்கிழமைகளில் வாரத்திருவிழா நடைபெறும். அதன்படி இந்த வருடம் முதல் சனி வாரத்திருவிழா வருகிற 23ந் தேதி தொடங்குகிறது.
30ந் தேதி 2-வது சனி வார திருவிழாவும், அடுத்த மாதம் 5ந்தேதி திருக்கல்யாணமும், 15ந் தேதி சோனை கருப்பணசாமி பொங்கல் மற்றும் சிறப்பு பூைஜ நடைபெறுகிறது.
அடுத்த மாதத்தில் 6, 13, 15ந் தேதிகளில் சனி வார வழிபாடு நடைபெறுகிறது. இந்த நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சுரபி நதியில் நீராடி சனீஸ்வர பகவானை வழிபாடு செய்வார்கள். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், அடிப்படை வசதிகள் மற்றும் பஸ் வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது.
Next Story
×
X