என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![ஆட்டோக்களில் அதிக பாரம் ஏற்றுவதால் விபத்து ஆட்டோக்களில் அதிக பாரம் ஏற்றுவதால் விபத்து](https://media.maalaimalar.com/h-upload/2023/04/23/1870456-videoshot20230419110701.webp)
அதிக அளவு பாரங்களை ஏற்றி செல்லும் ஆட்டோவை படத்தில் காணலாம். (இடம்: பாலக்கோடு பேருந்து நிலையம்).
ஆட்டோக்களில் அதிக பாரம் ஏற்றுவதால் விபத்து
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பொதுமக்கள் பல்வேறு வேலைகளுக்காக சென்றுவர ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது.
- அதிக ஒலி எழுப்பும் ஏர் ஆரன்களை பயன்படுத்துவது, உள்ளிட்ட விதி மீறல்களில் ஈடுபட்டு வரும் ஆட்டோக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
பாலக்கோடு,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, காரிமங்கலம், மாரண்டஹள்ளி ஆகிய நகர பகுதிகளில் இருந்து சுமார் 500-க்கும் கிராமப்புறங்களுக்கு பொதுமக்கள் பல்வேறு வேலைகளுக்காக சென்றுவர ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தி இருந்தும் ஆட்டோக்களில் சுமார் 15 நபர்களை ஏற்றிச் செல்கின்றனர். சிலர் கனரக சரக்கு வாகனங்களை மிஞ்சும் அளவிற்கு தக்காளி, காய்கறி, சிமெண்ட், பூசா மூட்டை, குடிநீர் குழாய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும் ஏற்றி செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஆட்டோக்களை செல்போன் பேசிக்கொண்டே ஒரு கையில் பிடித்து கொண்டு இயக்குவது, அதிக ஒலி எழுப்பும் ஏர் ஆரன்களை பயன்படுத்துவது, உள்ளிட்ட விதி மீறல்களில் ஈடுபட்டு வரும் ஆட்டோக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.