என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![குடிநீர்-கியாஸ் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட குழிகளால் விபத்து அபாயம் குடிநீர்-கியாஸ் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட குழிகளால் விபத்து அபாயம்](https://media.maalaimalar.com/h-upload/2022/06/20/1715630-untitled-1.jpg)
கியாஸ் - குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட குழி
குடிநீர்-கியாஸ் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட குழிகளால் விபத்து அபாயம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- கியாஸ் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டிய குழி 6மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது
- ஒரு வேலையை சரியாக முடித்துவிட்டு அடுத்த வேலையை தொடங்க வேண்டும்.
வீரபாண்டி :
திருப்பூர் சுண்டமேட்டிலிருந்து முருகாம்பாளையம் வழியாக காதுகேளாதோர் பள்ளி வரை சாலையின் இடதுபுறமாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக குழி தோண்டப்பட்டது. தோண்டிய குழி சரிவர மூடப்படாத நிலையில் சாலையின் வலது புறமாக கியாஸ் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டிய குழி 6மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் பணி முடியவில்லை. சாலையின் ஒரு பக்கம் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக தோண்டிய குழி சரியாக மூடப்படவில்லை. சாலையின் இருபக்கமும் குழி தோண்டியதால் வாகன ஓட்டிகள் தினந்தோறும் உயிரை கையில் பிடித்துகொண்டு செல்கின்றார்கள். மேலும் இரவு நேரத்தில் தினந்தோறும் விபத்து ஏற்படுகின்றன. எனவே ஒரு வேலையை சரியாக முடித்துவிட்டு அடுத்த வேலையை தொடங்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.