என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
காலை உணவு திட்டத்திற்கு லஞ்சம் கேட்கும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- பாதிக்கப்பட்ட பெண் கலெக்டரிடம் புகார் மனு
Byமாலை மலர்9 Aug 2023 3:06 PM IST
- சிறிது நாட்கள் கழித்து பணி வழங்க அதிகாரி ஒருவர் என்னிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.
- என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. அதனால் பணம் தராத காரணத்தால் வேறு நபரை அப்பணிக்கு அமர்த்தியுள்ளனர்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஏரியூர் அடுத்த பத்ரஅள்ளி ஊராட்சி பூவன்காடு காலனி பகுதியை சேர்ந்தவர் மகேஸ்வரி நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
பத்ரஅள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் பணிக்கு நான் விண்ணப்பித்தேன். எனக்கு இரண்டு நாள் பயிற்சிக்காக அழைத்து பயிற்சியையும் அளித்துள்ளனர்.
அதன் பின்னர் சிறிது நாட்கள் கழித்து பணி வழங்க அதிகாரி ஒருவர் என்னிடம் ரூ.30 ஆயிரம் லஞ்சம் கேட்டார். என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. அதனால் பணம் தராத காரணத்தால் வேறு நபரை அப்பணிக்கு அமர்த்தியுள்ளனர்.
எனவே லஞ்சம் கேட்கும் அதிகாரி மீது நடவடிக்கை எடுத்து எனக்கு அந்த பணியை வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
Next Story
×
X