என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அதியமான் கோட்டை  பெரியாண்டிச்சி அம்மன் கோவில் முப்பெரும் பூஜை திருவிழா
    X

    சிறப்பு அலங்காரத்தில் பெரியாண்டிச்சி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

    அதியமான் கோட்டை பெரியாண்டிச்சி அம்மன் கோவில் முப்பெரும் பூஜை திருவிழா

    • கோவிலுக்கு வருடத்திற்கு ஒரு முறை முப்பெரும் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
    • திருவிழாவின் இறுதி நாளான நேற்று காலை கங்கை பூஜை செய்யப்பட்டது.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்துள்ள அதியமான் கோட்டை காளியம்மன் கோவில் மைதானத்தில் ஸ்ரீ பெரியாண்டிச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலுக்கு வருடத்திற்கு ஒரு முறை முப்பெரும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டு கடந்த வெள்ளிக்கிழமை காலை உரு போடுதல் மற்றும் வீரகாரன் பூஜை நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை கச்சேரி ஸ்ரீ முனியப்பன் சுவாமிக்கு பெரும் பூஜை செய்தனர்.

    திருவிழாவின் இறுதி நாளான நேற்று காலை கங்கை பூஜை செய்து, மதியம் பெரியாண்டிச்சி அம்மனுக்கு கண் திறந்து வைத்து முப்பெரும் பூஜை நடைபெற்றது.

    இந்த விழாவில் அதியமான் கோட்டை அண்ணா தெரு, மல்லி குந்தம், சேலம்,ஈரோடு, கோடியூர்,பூரிக்கல் போன்ற பல்வேறு கிராமத்தில் இருந்து சுமார் 500-க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×