என் மலர்
உள்ளூர் செய்திகள்

கீழப்பாவூரில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம்

- முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவ படங்களுக்கு கே.ஆர்.பி.பிரபாகரன் மலர் மாலை அணிவித்தார்.
- தொடக்க விழாவையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
தென்காசி:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கீழப்பாவூரில் அ.தி.மு.க.வின் 52 -வது தொடக்க விழா கொண்டாடப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர், முன்னாள் மாவட்ட செயலாளர் கே.ஆர்.பி.பிரபாகரன் தலைமை தாங்கி முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவ படங்களுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர், அங்கு கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கீழப்பாவூர் பேரூர் செயலாளர் ஜெயராமன் செய்திருந்தார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகளான தீபொறி அப்பாதுரை,காளிமுத்து, விவேகானந்தர் கவுன்சிலர் பாவனி மற்றும் வார்டு செயலாளர்கள் மகளிர்அணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.