என் மலர்
உள்ளூர் செய்திகள்

செங்கோட்டையில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்

- அ.தி.மு.க. பூத் கமிட்டி பணிகள் ஆய்வு குறித்த ஆலோசனை கூட்டம் செங்கோட்டையில் நடந்தது.
- கூட்டத்தில் பொன்தனபாலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
செங்கோட்டை:
செங்கோட்டையில் தென்காசி வடக்குமாவட்ட அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் பூத் கமிட்டி, மகளிர் குழு இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை குழு அமைத்து வரும் பணிகள் ஆய்வு குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மகளிரணி துணை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் பொய்கை மாரியப்பன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாநில அண்ணா தொழிற்சங்க மாநில துணை செயலாளர் பொன்தனபாலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சிவஆனந்த், மாவட்ட அண்ணா தொழிற்சங்க மண்டல முன்னாள் செயலாளர் கந்தசாமிபாண்டியன், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் சண்முகையா நன்றி கூறினார்.