என் மலர்
உள்ளூர் செய்திகள்

மானூர் பகுதியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு

- பூத்களை ஆய்வு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
- ஆய்வின்போது பொறுப்பாளர்களை நேரில் சந்தித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்டம் மானூர் வடக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க. இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிர் குழு பூத் கமிட்டி அமைத்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ண முரளி, முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் தலைமையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அதில் அனைத்து ஒன்றியங்களிலும் ஆலோசனை குழு அமைத்து நிர்வாகிகளை சந்திப்பது, பூத்களை ஆய்வு செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதன்பேரில் மானூர் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் முன்னாள் அமைச்சரும், மகளிர் அணி துணை செயலாளருமான ராஜலெட்சுமி தலைமையில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆய்வு நடைபெற்றது. தொடர்ந்து பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நேரில் சந்தித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பூத் கமிட்டி பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட குருக்கள்பட்டி செல்வம், இளைஞர் அணி நிர்வாகி மேல இலந்தைக்குளம் செந்தில் குமார், மானூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.