search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டெண்டரை முறையாக நடத்தக்கோரி  அ.தி.மு.க.வினர் அதிகாரிகளை முற்றுகையிட்டு  வாக்குவாதம்
    X

       கண்டமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அ.தி.மு.க. வினர் போராட்டத்தில் ஈடுபட்டதை காணலாம்.

    டெண்டரை முறையாக நடத்தக்கோரி அ.தி.மு.க.வினர் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம்

    • டெண்டரை முறையாக நடத்தக்கோரி அ.தி.மு.க.வினர் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.
    • ஒப்பந்ததாரர்கள் ஆன்லைன் மூலம் டென்டருக்கு விண்ணப்பம் செய்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றி யத்தில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்-–2, 2022–-2023 ஆண்டுக்கான பணிகள் 5 ஊராட்சிகளில் 32 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக ரூ. 2 கோடியே 11 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பில் பணிகளுக்கு டெண்டர் கோரப்பட்டது. இது குறித்து கடந்த 1-ந் தேதி நடைபெறுவதாக இருந்த டெண்டர், 5-ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் டிச.8-ந் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அ.தி.மு.க. வை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் ஆன்லைன் மூலம் டென்டருக்கு விண்ணப்பம் செய்தனர். பின்னர் அதற்கான முத்திரையிடப்பட்ட டெண்டர் படிவங்களை பி.டி.ஓ., அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க சென்றுள்ளனர்.

    ஆனால் அதிகாரிகள் டெண்டர் படிவங்களை வாங்க மறுத்துவிட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து ஒன்றிய அதிமுக., செயலாளர்கள் கண்ணன், ராமதாஸ் ஆகியோர் தலைமையில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் மற்றும் கட்சி நிர்வாகிகள் பி.டி.ஓ., அலுவலகத்தில் திரண்டனர். அப்போது பி.டி.ஓ.,க்கள் இல்லாததால் நிர்வாக மேலாளர் சண்முகம், துணை பி.டி.ஓ., ஆகியோரை முற்றுகையிட்டு, ஏன் டெண்டர் படிவங்களை வாங்க மறுக்கிறீர்கள், வாங்க முடியாது என்றால் எழுதிக்கொடுங்கள் எனக்கேட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தணை பி.டி.ஓ. சுபாஷ் மாலை 4.00 மணிக்கு (நேற்று) டெண்டர் படிவங்கள் திறக்கப்பட்டு முறைப்படி டெண்டர் நடைபெறும் என்றும் அதில் அனைவரும் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார். இதை எடுத்து அ.தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    Next Story
    ×