search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கள்ளச்சாராயத்தை தடுக்க கோரி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
    X

    கள்ளச்சாராயத்தை தடுக்க கோரி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

    • தமிழ்நாடு முழுவதும் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள்.
    • ஆயிரக்கணக்கான கழக நிர்வாகிகள் பங்கேற்று தி.மு.க. ஆட்சியை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதிகளில் விஷச்சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்துக்கு தி.மு.க. அரசின் அலட்சிய போக்குதான் காரணம் என்று அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்து இருந்தது. அதுமட்டுமின்றி, கவர்னர் மாளிகைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பேரணியாக சென்று கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்து தி.மு.க. அரசு மீது புகார் மனு கொடுத்தார்.

    தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. கொலை, கொள்ளை, வழிப்பறி, போதைப் பொருட்கள் புழக்கம் உள்ளிட்டவைகளை கட்டுப்படுத்த தி.மு.க. அரசு தவறி விட்டது என்றும் குற்றம்சாட்டி கவர்னரிடம் வழங்கிய மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

    இதற்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். சென்னையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் அன்றைய தினம் ஏராளமான கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    இதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் கலெக்டர் அலுவலகங்கள் முன்பு இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

    அதன்படி தமிழ்நாடு முழுவதும் சென்னையை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்கள்.

    செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகம் சார்பில் தாம்பரம் சண்முகா சாலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, மாவட்டக்கழக செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னையா ஆகியோர் பங்கேற்று தி.மு.க. ஆட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    இதில் சென்னை பிரிவு தகவல் தொழில்நுட்ப நிர்வாகி சத்யன், மாவட்ட பொருளாளர் பரசுராமன், பகுதி செயலாளர்கள் கோபிநாதன், கூத்தன், எல்லார் செழியன், ஜெயபிரகாஷ், ஜெகன், அப்பு என்கிற வெங்கடேசன், வக்கீல் சதீஷ், அருணாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதில் ஆயிரக்கணக்கான கழக நிர்வாகிகள் பங்கேற்று தி.மு.க. ஆட்சியை கண்டித்து கண்டன முழக்கமிட்டனர்.

    திருவொற்றியூர், பெரியார் நகரில் மாவட்ட செயலாளர் மாதவரம் வி.மூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ.கே. குப்பன் அவைத்த லைவர் பி.ராஜேந்திரன், பகுதி செயலாளர் அஜாக்ஸ் எஸ்.பரமசிவம், கண்ணதாசன், வேலாயுதம், மாமன்ற உறுப்பினர்கள் டாக்டர் கே. கார்த்திக், முல்லை ராஜேஷ், ஸ்ரீதரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    மதுரவாயல் மின்சார வாரியம் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா. பென்ஜமின் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் தீபா கண்ணன், ஜாவித் அகமது, முன்னாள் எம்.எல்.ஏ. இரா. மணிமாறன், கா.சு. ஜனார்த்தனன், கிழக்கு பகுதி செயலாளர் ஏ.தேவதாஸ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் விஷ சாராயம், கள்ளச்சாராயம் விற்பனையை தடுத்து நிறுத்து, மின் கட்டணம், பால் விலை உயர்வை ரத்து செய், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டு போன்ற கோஷங்கள் எழுப்பபட்டன.

    ஆர்ப்பாட்டத்தில் பகுதி செயலாளர்கள் என்.எம். இம்மானுவேல், கே.தாமோதரன், இ. கந்தன், சென்னை மாநகராட்சி அ.தி.மு.க. எதிர்க்கட்சி துணைத்தலைவர் டி. சத்தியநாதன் மற்றும் காட்டுப்பாக்கம் ராஜகோபால், சதீஷ்குமார், திருநின்றவூர் கிஷோர், பூந்தமல்லி நகர செயலாளர் கே.எஸ்.ரவிசந்திரன், திருமழிசை நகர செயலாளர் டி.எம்.ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் கே.ஜி.டி.கவுதமன், ராஜா என்கிற பேரழகன், மகேந்திரன், என்ஜினியர் ஜெ.துரைராஜ், புட்ளூர் சந்திரசேகரன், வட்டச் செயலாளர்கள் எம்.பி.தென்றல் குமார், பரத், ராமாபுரம், ராஜ்குமார் பச்சையப்பன், கே.பி.வேணுகோபால், அகிம்சை வி.குமரேசன், முகப்பேர் இளஞ்செழியன், வட்டச்செயலாளர் பாரத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதே போன்று திருவள்ளூர் தெற்கு மாவட்டம் அம்பத்தூரில் மாவட்ட செயலாளர் வி. அலெக்சாண்டர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம், மாவட்ட அவை தலைவர் திண்டு உத்தமராஜ்,வி.கே,ரவி, பகுதிச் செயலாளர்கள் கே.பி.முகுந்தன், ஜெ. ஜான், சி.வி.மணி, ஆவடி சங்கர், ஆர்.சி.டி.ஹே மேந்திரன், பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×