என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
தருமபுரி கோட்டை ஸ்ரீ மல்லிகார்ஜுன சாமி கோவிலில் ஆனி திருமஞ்சன திருவிழா
Byமாலை மலர்26 Jun 2023 3:50 PM IST
- விழாவை ஒட்டி மல்லிகார்ஜுன மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
- சிறப்பு அலங்காரத்தில் ஆனி திருமஞ்சன தரிசனமும் மகா தீபாரனையும் நடைபெற்றது.
தருமபுரி,
தருமபுரி கோட்டை கோவிலில் நேற்று ஆனித் திருமஞ்சன திருவிழா நடைபெற்றது. விழாவை ஒட்டி மல்லிகார்ஜுன மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து சங்காபிஷேகமும் கலசபிஷேகமும் மற்றும் புஷ்பாஞ்சலி சேவையும் நடைபெற்றது. பின்னர் கோவிலில் உற்சவமூர்த்திக்கு பல்வேறு வகையான பழங்களாலும், மூலிகை திரவங்களாலும் மற்றும் பால், தயிர், சந்தனம், பண்ணி, உள்ளிட்ட நறுமணம் பொருட்களால் மகா அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
பின்னர் சிறப்பு அலங்காரத்தில் ஆனி திருமஞ்சன தரிசனமும் மகா தீபாரனையும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story
×
X