search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனுமந்தை  அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா
    X

     அனுமந்தை கிராமத்தில் அங்காளம்மன் கோயில் தேர் திருவிழா நடைபெற்றது.

    அனுமந்தை அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா

    • தினமும் அம்மன் மற்றும் சுவாமிகளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடைபெற்று வந்தது.
    • பாவாடைராயன் நிஷாசனி மற்றும் வல்லாளராயன் கோட்டை எழுத்தில் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே அனுமந்தை கிராமத்தில் அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த மாதம் 31-ந் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து தினமும் அம்மன் மற்றும் சுவாமிகளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள், யாகங்கள் நடைபெற்று வந்தது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக 7-ந் தேதி இரவு காளி முகம் ஏந்துதல், முத்து பல்லக்குடன் அம்மன் வீதி உலா நிகழ்ச்சி மற்றும் மேடை நாடக நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து நேற்று மாலை தேர் திருவிழா நடைபெற்றது. அம்மன் சன்னதியில் இருந்து புறப்பட்ட தேர் ஊர்வலமாக சென்று மயானத்தை சென்றடைந்தது அங்கு பொதுமக்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்த கடலை, பலா, மா, போன்ற விவசாய பொருட்களை கொள்ளை விட்டனர். தொடர்ந்து பாவாடைராயன் நிஷாசனி மற்றும் வல்லாளராயன் கோட்டை எழுத்தில் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    Next Story
    ×