search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் நியமனம்
    X

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் நியமனம்

    • வக்கீல் ஆபத்துக்காத்தான் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    • நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஷெரிப் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    செங்கோட்டை:

    தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவராக, செங்கோட்டையை சேந்த முன்னாள் நகர தி.மு.க. செயலாளரான முத்தையா தேவரின் மகனும், கலைஞர் தமிழ்ச்சங்க செயலாளர் வக்கீல் ஆபத்துக்காத்தான் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தி.மு.க. கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் வாகை சந்திரசேகர் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து அவர் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஷெரிப், தென்காசி தெற்கு மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் மாரியப்பன், செங்கோட்டை நகர துணைச்செயலாளர் ஜோதிமணி, பெர்னாட்ஷா, நாட்டாமை ஆறுமுகம், வேலுமணி, ஓம் சக்தி அய்யப்பன், ராமகிருஷ்ணன், திருமால், டைல்ஸ் மாரியப்பன், ஆசிரியர் மணிகண்டன், ரமேஷ், வேல் சாமி, கண்ணன், பட்டையா, அண்ணாதுரை, நடராஜன், சரவணன், கணேசன், ரெங்கன், செங்கோட்டை வார்டு நிர்வாகிகள், கலைஞர் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×