என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மூச்சுப் பயிற்சி அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மூச்சுப் பயிற்சி](https://media.maalaimalar.com/h-upload/2023/11/23/1985600-1-pranayamam-1582200872.webp)
X
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மூச்சுப் பயிற்சி
By
மாலை மலர்23 Nov 2023 11:38 AM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அரியலூரில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மூச்சுப் பயிற்சி அளிக்கப்பட்டது
- மாணவ மாணவியர் மூச்சுப் பயிற்சியில் பங்கேற்றனர்
அரியலூர்,
அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு நினைவாற்றலை அதிகரிக்க, மூச்சுப் பயிற்சி அளிக்கப்பட்டது.கீழப்பழுவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய யோகா பயிற்சியாளர் ஜெய்சங்கர், கலந்து கொண்டு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மூச்சுப் பயிற்சியினை செய்து காண்பித்தார்.நிகழ்ச்சியில் சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிகில் ராஜ் கலந்து கொண்டார். ஆசிரியர்கள் தனலட்சுமி, செந்தில்குமரன், செவ்வேள், தங்கபாண்டி, இளநிலை உதவியாளர் மணிகண்டன் மற்றும் மாணவ மாணவியர் மூச்சுப் பயிற்சியில் பங்கேற்றனர்.
Next Story
×
X