என் மலர்
உள்ளூர் செய்திகள்
அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகள்; கலெக்டர் நேரில் ஆய்வு
- அரியலூர் மாவட்டத்தில் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்
- வாரணவாசி சமத்துவபுரத்தில் தனிநபர் இல்லங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புணரமைப்பு பணிகளை பார்வையிட்டார்.
அரியலூர்.
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், திருமானூர் ஒன்றியம், வாரணவாசி ஊராட்சி, வாரணவாசியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் பிள்ளையார் குட்டை ஏரி தூர்வாருதல் மற்றும் கரைகளை பலப்படுத்துதல் பணிகளை பார்வையிட்டு உரிய காலத்திற்குள் விரைவாக முடித்திடவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, வாரணவாசி சமத்துவபுரத்தில் கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் நிதி திட்டத்தின் கீழ் ரூ.4.90 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலையின் தரம்குறித்து ஆய்வு செய்தார். பின்னர் வாரணவாசி சமத்துவபுரத்தில் தனிநபர் இல்லங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் புணரமைப்பு பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து, 15வது நிதிக்குழு மான்யம் வட்டார ஊராட்சி திட்டத்தின்கீழ் ரூ.54,000 மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சமையலறை கட்டிடம் பழுது நீக்கம் செய்தல் பணியினை ஆய்வு செய்தார்.
பின்னர், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.5.91 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய துவக்கிபள்ளியில் நடைபெற்றுவரும் கழிவறை கட்டுமானப் பணியினை பார்வையிட்டார். அதனை தொடர்ந்து, வாரணவாசி கிராமம், திருமானூர் ஒன்றியம், சாத்தமங்கலம் கிராமம், சுள்ளங்குடி கிராமம், ள்ளங்குடி கிராமம் ஆகியவறறில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) திரு.முருகண்ணன், வட்டார வளரச்சி அலுவலர்கள் திரு.பொய்யாமொழி, திரு.ஜாகிர் உசைன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.