என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரியலூரில் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்

- அரியலூரில் மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது
- அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பங்கேற்பு
அரியலூர்
அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது, மாநில சட்ட திருத்த குழு உறுப்பினர் சுபாசந்திரசேகர், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பெருநற்கிள்ளி, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வ இளையராசன், துணை அமைப்பாளர் சசிகுமார், மாவட்ட தலைவர் மாணிக்கம், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் பாலு, செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைச் செயலாளர் சந்திரசேகர், லதா பாலு, கணேசன், ஒன்றிய செயலாளர் அரியலூர் அன்பழகன், அறிவழகன்,
திருமானூர் கென்னடி, அசோக சக்கரவர்த்தி, செந்துறை செல்வராஜ், எழில்மாறன், ஜெயங்கொண்டம் தனசேகரன், மணிமாறன், ஆண்டிமடம் முருகன், கலியபெருமாள், தா.பழுர் கண்ணன், சௌந்தர்ராஜ், நகரச் செயலாளர் அரியலூர் முருகேசன், ஜெயங்கொண்டம் கருணாநிதி, உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளரும், போக்குவரத்து துறை அமைச்சருமான எஸ். எஸ். சிவசங்கர் கலந்து கொண்டு பேசியதாவது :
ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. பல லட்சம் கோடி கடன் சுமை விட்டு சென்றது. இப்படி இக்காட்டான நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறமையாக ஆட்சி புரிந்து வருகிறார். மக்களின் பிரச்னைகளை கேட்டு அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார். அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பணியாளர்களுக்கு தீபாவளியையொட்டி மனநிறைவான போனஸ் கொடுக்கப்பட்டது. அதனால், போக்குவரத்துத்துறையில் பணி செய்யும் அனைவரும் மனமகிழ்ச்சி அடைந்தனர்.
இதன்மூலம் தீபாவளி பண்டிகையின் போது மக்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வர பேருந்து வசதிகள் சிறப்பாக அமைந்தது. தேர்தல் வாக்குறுதியில் அறிவிக்காத ஒரு திட்டமான புதுமைப் பெண் திட்டத்தால் இனிவரும் காலங்களில் 90 சதவீத பெண் குழந்தைகள் உயர்கல்வியினை பெறுவர்.
அரியலூருக்கு தமிழக முதலமைச்சர் நலத்திட்ட உதவிகள் வழங்க வருவதாக இருந்தது அவரது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவர்கள் ஆலோசனையின் பேரில் ஓய்வு எடுத்து வருகிறார் அதனால் 5ம் தேதி நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்படுகிறது பின்னர் தேதி அறிவிக்கப்படும் எப்போது வருகை தந்தாலும் சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.