என் மலர்
உள்ளூர் செய்திகள்

தமிழ் மொழியை காக்க தொடங்கப்பட்ட இயக்கம் தி.மு.க. - அமைச்சர் பேச்சு
- இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான பொதுக்கூட்டம்
- தமிழ் மொழியை காக்கவே தொடங்கப்பட்ட இயக்கம்தான் திராவிட முன்னேற்ற கழகம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சினார்.
அரியலூர்:
அரியலூர் அண்ணா சிலை அருகில் மாவட்ட தி.மு.க. சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி, போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டனர்,
இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் சந்திரசேகர் வரவேற்று பேசினார். மாநில சட்ட திருத்த குழு உறுப்பினர் சுபா சந்திரசேகர் கொள்கை பரப்பு துணை செயலாளர் பெருநெற்கிள்ளி, ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. கண்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தெய்வஇளையராசன், துணை அமைப்பாளர் லூயி கதிரவன், சசிகுமார், மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி பேசியதாவது:
தமிழ் மொழியின் படைப்புகள் பல்வேறு நாடுகளில் மொழி பெயர்த்து வெளியிட்டு வரும் அறிஞர்கள் பலரும் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர். மறைந்த மொழிப்போர் தியாகி கீழப்பழுவூர் சின்னச்சாமி தமிழுக்காக தன்னுயிரை விட்டவர். அவர் வாழ்ந்த மண்ணில் பேசுவதை பெருமையாக கருதுகிறேன். வங்கி, தபால் நிலையங்களில் பலரும் இந்திகாரர்களே பணியில் உள்ளனர். அங்கு தமிழர் செல்லும் போது எதுவும் புரியாமல் தவிக்கின்றனர். திராவிட முன்னேற்ற கழகம் என்பது தமிழ் மொழியை காக்கவே தொடங்கப்பட்ட இயக்கமாகும். இந்தி மொழிக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திணிக்க வேண்டாம் என்பதே எங்கள் கொள்கையாகும். பிரதமரை சந்தித்த போது தமிழக முதல்வர் முதல் கோரிக்கையாக வைத்தது நீட் வேண்டாம் என்பது. இருமொழி கொள்கையை வர வேற்போம். இந்தி திணிப்பு என்று வந்தாலும் தொடர்ந்து தி.மு.க. எதிர்த்து நிற்கும் என பேசினார், நிகழ்ச்சி முடிவில் மாவட்ட துணை செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.