என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இடுப்பொருட்களை உழவன் செயலில் பதிய வேண்டும்-அரியலூர் கலெக்டர் வேண்டுகோள் விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இடுப்பொருட்களை உழவன் செயலில் பதிய வேண்டும்-அரியலூர் கலெக்டர் வேண்டுகோள்](https://media.maalaimalar.com/h-upload/2023/06/08/1894581-untitled-1.webp)
விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இடுப்பொருட்களை உழவன் செயலில் பதிய வேண்டும்-அரியலூர் கலெக்டர் வேண்டுகோள்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இடுப்பொருட்களை உழவன் செயலில் பதிய வேண்டும் என அரியலூர் கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
- விவசாயிகள் இச்செயலியில் உரிய பதிவுகள் மேற்கொண்டு வேளாண் துறையின் திட்டப்பலன்களை அறிவதோடு, பயன்பெற்றும் வருகின்றனர்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு தேவையான வேளாண் இடுப்பொருள்களை உழவன் செயலில் மூலம் பதிவு செய்து பயன் பெறலாம் என்று கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- அரியலூர் மாவட்டத்தில் நடப்பாண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 40 கிராம ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டங்களில் பயன்பெறுவதற்காகவும், விவசாயிகளின் நலனைக் காக்கும் பொருட்டும், அவர்களது தேவையை முன்கூட்டியே வேளாண்மைத்துறைக்கு தெரிவித்து முன்னுரிமை அடிப்படையில் திட்டப் பலன்களை பெறுவதற்காகவும், உழவன் செயலியினை ஏற்படுத்தியுள்ளது. விவசாயிகள் இச்செயலியில் உரிய பதிவுகள் மேற்கொண்டு வேளாண் துறையின் திட்டப்பலன்களை அறிவதோடு, பயன்பெற்றும் வருகின்றனர். அரியலூர் மாட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் தங்கள் கைபேசியில் உழவன் செயலியினை பதிவிறக்கம் செய்து திட்டப் பலன்களை பெற்றிட உரிய முன்பதிவுகள் மேற்கொள்ள வேண்டும். முன்பதிவு செய்வதினால் வழங்கப்படும் இடுபொருள்கள் மற்றும் திட்டப் பலன்களை உரிய காலத்தில் பெற்று பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.