என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரியலூர் அரசு கல்லூரி கவுரவ  விரிவுரையாளர்கள் காலவரையற்ற போராட்டம்
    X

    அரியலூர் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் காலவரையற்ற போராட்டம்

    • அரியலூர் அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பணி நிரந்தரம் செய்ய கோரி நடைபெறுகிறது.

    அரியலூர்:

    பணி நிரந்தரம் செய்யக் கோரி அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கினர்.

    தமிழகத்திலுள்ள அரசு கலைக் கல்லூரிகளில் கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், அவர்களைப் பணி நிரந்தரம் செய்யும் அரசாணை கடந்த 2019 - இல் வெளியானது. ஆனால் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. பலர் ஓய்வுப் பெற்றுவிட்டனர்.

    இந்நிலையில், பணிநிரந்தரம் செய்ய கோரி நவ.10 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு அரசு கல்லூரி கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு அறிவித்தது.

    அதன்படி அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வரும் கௌரவ விரிவுரையாளர்கள் 54 பேர், தங்களது பணியை புறக்கணித்து கல்லூரி அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். இவர்களது போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, மாணவ, மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்தனர்.

    இதுகுறித்து கௌரவ விரிவுரையாளர்கள் தெரிவித்தது:

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கல்வியியல் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக கடந்த 25 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறோம். எங்களை பணிநிரந்தரம் செய்வோம் என கூறிவந்த அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசுகள், இன்று அரசாணை எண் 246,247, 248 மூலம் எங்களை வெளியேற்றும் பணியை செய்ய முன்வந்துள்ளது. இந்த அரசாணைகளை காரணம் ஏதும் கூறாமல் உடனடியாக திரும்ப பெற வேண்டும்.

    ராஜஸ்தான், ஒடிசா, குஜராத், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்களை பணிநிரந்தரம் செய்வதாக அம்மாநில முதல்வர்கள் அறிவித்துள்ளார்கள். அது போல் தமிழகத்திலும் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்றனர்.

    Next Story
    ×