என் மலர்
உள்ளூர் செய்திகள்

தாத்தாவை கொலை செய்த பேரனுக்கு ஆயுள் தண்டனை

- தாத்தாவை கொலை செய்த பேரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது
- சொத்துக்காக நடந்த சம்பவம்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் உடையப்பாளையம் அருகே காடுவெட்டாங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் அய்யாறு, இவரது பேரன் மணிகண்டன். இவர் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன், ஆதலால் எனக்கு வீடு கட்ட ஒரு பகுதியை எழுதிக் கொடுக்க கேட்டுள்ளார், அய்யாறு எழுதி கொடுத்து விட்டார், இதை கேள்விப்பட்ட மற்றொரு பேரனான அசோக் ஆத்திரத்தில் சொத்து கேட்டு தகராறு செய்து, அய்யாருவின் கை கட்டைவிரலை வெட்டிவிட்டு உருட்டு கட்டையால் தாக்கியதும் பலத்த காயமடைந்த, அய்யாறு சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக கிராம நிர்வாக அதிகாரி கொளஞ்சிநாதன் கொடுத்த புகாரின் பேரில், உடையார்பாளையம் போலீசார் அசோக்கை கைது செய்தனர், இந்த வழக்கின் விசாரணை அரியலூர் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்றது. அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் சின்னத்தம்பி ஆஜராகி வாதாடினார், இருதரப்பு வாதங்களையும் கேட்ட மாவட்ட நீதிபதி மகாலட்சுமி சொத்துக்காக தாத்தாவையே கொலை செய்த குற்றத்திற்காக அசோக்கிற்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கினார். இதை அடுத்து திருச்சி மத்திய சிறையில் அசோக்கை அடைத்தனர்.