என் மலர்
உள்ளூர் செய்திகள்

2 குழந்தைகளின் தாய் மாயம்

- 2 குழந்தைகளின் தாய் மாயமானார்.
- தோட்டத்துக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்
அரியலூர்
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள உதயநத்தம் காலனி தெருவை சேர்ந்த காசிலிங்கத்தின் மகன் வீரக்குமார்(வயது 28). இவரது மனைவி பிரியதர்ஷினி(வயது24). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளதாக தெரிகிறது. வீரக்குமார் திருப்பூரில் சாயப்பட்டறையில் வேலை செய்து வருகிறார். இதனால் பிரியதர்ஷினி, தனது குழந்தைகளுடன் உதயநத்தம் கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் தீபாவளிக்காக தனது ஊருக்கு வீரக்குமார் வந்தார்.
இந்நிலையில் கடந்த 26-ந் தேதி காலை பிரியதர்ஷினி தோட்டத்துக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் அவர் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த வீரக்குமார், அவரை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடிப் பார்த்துள்ளார். எங்கு தேடியும் பிரியதர்ஷினி கிடைக்கவில்லை. இது குறித்து வீரக்குமார் தா.பழூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகசுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.s