என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
ஜெயங்கொண்டம் அரசு கலைக்கல்லூரியில் இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்ற கோரி பா.ம.க.வினர் மனு
Byமாலை மலர்23 Jun 2023 12:22 PM IST
- ஜெயங்கொண்டம் அரசு கலைக்கல்லூரியில் இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்ற கோரி பா.ம.க.வினர் மனு அளித்தனர்
- இட ஒதுக்கீட்டு முறையை எவ்வித சமரசமும் இல்லாமல் பின்பற்ற வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தார்
ஜெயங்கொண்டம்,
தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இச்சேர்க்கையில் இட ஒதுக்கீட்டு முறையை எவ்வித சமரசமும் இல்லாமல் பின்பற்ற வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன்படி மாநில மாணவரணி செயலாளர் கொடுக்கூர் ஆளவந்தார் இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்ற கோரி ஜெயங்கொண்டம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் இராணியிடம் மனு அளித்தார். இந்நிகழ்வில் ஜெயங்கொண்டம் நகர செயலாளர் பரசுராமன், ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் வினோத் ராஜ்குமார், அருண் மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
X