என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
Byமாலை மலர்5 Sept 2023 2:55 PM IST
- கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்
- மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 320 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து கலெக்டரால் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
Next Story
×
X