search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாக்காளர் பட்டியில் திருத்த பணிகள் ஆய்வு கூட்டம்
    X

    வாக்காளர் பட்டியில் திருத்த பணிகள் ஆய்வு கூட்டம்

    • அரியலூரில் வாக்காளர் பட்டியில் திருத்த பணிகள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது
    • வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் என்.வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்றது

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, வாக்காளர் பட்டியல் கண்காணிப்பு அலுவலர் என்.வெங்கடாசலம் தலைமை வகித்து, கடந்த இரு தினங்களாக நடைபெற்று வந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்து, ஆலோசனைகளை வழங்கினார்.

    தொடர்ந்து அவர், அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வாலாஜாநகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் உடையார்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய மையங்களில் நடைபெற்ற முகாம்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் 18.11.2023 மற்றும் 19.11.2023 ஆகிய இரு தினங்களில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வுகளில் மாவட்ட கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா, மாவட்ட வருவாய் அலுவலர்கலைவாணி, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் பூங்கோதை, வருவாய் கோட்டாட்சியர்கள் அரியலூர் ராமகிருஷ்ணன், உடையார்பாளையம் பரிமளம் அரியலூர் வட்டாட்சியர் ஆனந்தவேல், தேர்தல் வட்டாட்சியர் வேல்முருகன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×