என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
அரியலூரில் மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு கூட்டம்
Byமாலை மலர்19 Jun 2022 2:28 PM IST
- அரியலூர் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் மாதாந்திர கூட்டமைப்பு கூட்டம் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் நடந்தது.
- நிலக்கரிக்காக கையகப்படுத்திய நிலங்களை எந்த ஒரு எதிர்பார்பும் இல்லாமல் திரும்ப விவசாயிகளுக்கே ஒப்படைத்த தமிழக அரசுக்கு பாராட்டும், அகவிலைப் படி உயர்வை தாமதிக்காமல் வழங்கி உதவும் வகையில் ஆணை பிறப்பிக்க ஆவணம் செய்ய வேண்டும்
அரியலூர்:-
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு கூட்டம் நடந்தது.
அரியலூர் அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்ஷனர்கள் மாதாந்திர கூட்டமைப்பு கூட்டம் அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் நடந்தது. கூட்டத்திற்கு துணைத்தலைவர் கோவிந்தராசு தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் நிலக்கரிக்காக கையகப்படுத்திய நிலங்களை எந்த ஒரு எதிர்பார்பும் இல்லாமல் திரும்ப விவசாயிகளுக்கே ஒப்படைத்த தமிழக அரசுக்கு பாராட்டும்,
அகவிலைப் படி உயர்வை தாமதிக்காமல் வழங்கி உதவும் வகையில் ஆணை பிறப்பிக்க ஆவணம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Next Story
×
X