என் மலர்
உள்ளூர் செய்திகள்
வினாத்தாள்கள் தாமதத்தால் மன உளைச்சலுக்கு ஆளான மாணவர்கள்
- வினாத்தாள்கள் தாமதத்தால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்
- அதிகாரிகள் தரப்பில் அக்கறையின்மையை காட்டுகிறது
அரியலூர்:
அரியலூர் மாவட்ட பள்ளிகளில் காலாண்டுத் தேர்வுக்கான வினாத்தாள்கள் தாமதமாக விநியோகிக்கப்பட்டதால் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
4 மற்றும் 5 வகுப்பு மாணவர்களுக்கு 28 ஆம் தேதி கணிதத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மாணவர்கள் இரவு முழுவதும் கண்விழித்து படித்து, புதன்கிழமை காலை தேர்வு எழுதச் சென்றனர். காலை 9.30 மணிக்கு தேர்வு எழுதுவதற்காக மாணவர்கள் அனைவரும் பள்ளி வகுப்பறையில் தனித் தனியே அமர்ந்திருந்த நிலையில், பிற்பகல் 1 மணி கடந்தும் வினாத்தாள்கள் வழங்கப்படவில்லை. பிற்பகல் 2 மணிக்கு மேல் தான் மாணவர்களுக்கு வினாத்தாள்கள் விநியோகிக்கப்பட்டன.
காலையில் தேர்வு எழுதுவதற்கு ஆர்வத்துடன் சுறுசுறுப்பாக வந்த மாணவ, மாணவிகள் வினாத்தாள் தாமதமாக கிடைக்கப் பெற்றதால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினர்.
இதுகுறித்து கல்வி மாவட்ட அலுவலர்களிடம் கேட்ட போது, அனைத்து பாடங்களுக்கான வினாத்தாள்கள் ஒட்டுமொத்தமாக அச்சடிக்கப்பட்டு தேர்வு தொடங்குவதற்கு முதல் நாளிலேயே அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டால் இது போன்ற நிர்வாக சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இருக்காது.
ஒவ்வொரு நாளும் அதிகாரிகள் வினாத்தாள்களை தேர்வு நடைபெறும் அன்று காலை சென்று பெற்று வருவதால் வினாத்தாள்களில் பிழைகள் ஏதாவது உள்ளனவா, வினாத்தாள்கள் சரியான எண்ணிக்கையில் இருக்கிறதா என உறுதி செய்ய முடிவதில்லை என்றனர்.
எனவே சிறுவர்களுக்கு நடத்தப்படும் தேர்வில் கூட அதிகாரிகள் தரப்பில் அக்கறையின்மையை காட்டுகிறது. வினாத்தாள் வழங்குவதில் முறையான நடைமுறையயை பின்பற்றவேண்டும் என பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.