என் மலர்
உள்ளூர் செய்திகள்
பெட்டிக்கடைக்கு தீ வைத்த முதியவர்
- பெட்டிக்கடைக்கு முதியவர் தீ வைத்துள்ளார்
- போலீசார் தேடி வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், கீழப்பழுவூரை சேர்ந்தவர் கலியபெருமாள்(வயது 35). இவர் அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 2-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணியன்(65) என்பவர், கலியபெருமாளின் பெட்டிக்கடைக்கு வந்துவிட்டு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் அங்கு வந்த அவர், ரேஷன் அட்டையை அங்கு வைத்துவிட்டு சென்றதாக கூறியுள்ளார். அதற்கு கலியபெருமாள், அவர் அங்கு ரேஷன் அட்டையை வைக்கவில்லை என கூறியுள்ளார். மேலும் அவரை அங்கிருந்து செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் அவர் அங்கிருந்து ெசல்லாததால், கலியபெருமாள் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் இந்த பெட்டிக்கடை தீப்பற்றி எரிந்து நாசமானது. இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்த பெட்டிக்கடைக்கு சுப்ரமணியன் தீ வைத்தது போன்ற காட்சி, அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அந்த காட்சிகளை பார்வையிட்ட போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து சுப்ரமணியனை தேடி வருகின்றனர்."