என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![திருக்குறள் பெயர் பலகை திறப்பு திருக்குறள் பெயர் பலகை திறப்பு](https://media.maalaimalar.com/h-upload/2023/08/01/1925055-ari31thiru.webp)
X
திருக்குறள் பெயர் பலகை திறப்பு
By
மாலை மலர்1 Aug 2023 12:04 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- அரியலூரில் திருக்குறள் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது
- நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்
அரியலூர்,
அரியலூர் அரசு கலைக் கல்லூரி சாலையில், உலக திருக்குறள் கூட்டமைப்பு மாநில துணை பொதுச் செயலர் பெ.செüந்தரராஜன், நாளும் ஒர் திருக்குறள் பெயர் பலகையை திறந்து வைத்தார். உலக திருக்குறள் கூட்டமைப்பின் மாவட்ட மகளிர் அணிச் செயலாளரும், வழக்குரைஞருமான எஸ்.வி.சாந்தி, புலவர் சி.இளங்கோ, சாந்தி மருத்துவமனை மருத்துவர் நாகராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் பாண்டியன், செயலர் பெ.நாகமுத்து, துணைச் செயர் செவ்வேல் , செயற்குழு உறுப்பினர்கள் மலர்மாறன், ரவி, தனபால் உள்ளிட்டோர் பேசினர் . முடிவில் உலக திருக்குறள் கூட்டமைப்பின் மண்டல தலைவர் க.சின்னதுரை நன்றியுரை கூறினார். நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவியர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
×
X