search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதுபானக்கடையில்  காவலாளியை தாக்கி மதுபாட்டில்-பணம் திருடிய 2 பேர் கைது
    X

    மதுபாட்டில்களை திருடி சென்ற 2 பேரை, திருநள்ளாறு போலீசார் கைது செய்தனர்.

    மதுபானக்கடையில் காவலாளியை தாக்கி மதுபாட்டில்-பணம் திருடிய 2 பேர் கைது

    • மதுபானக்கடையில் காவலாளியை தாக்கி மதுபாட்டில், பணம் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் இயங்கி வரும் தனியார் மதுபானக்கடையில் வியாபாரத்தை முடித்து விட்டு இரவு வழக்கம் போல் கடை மூடப்பட்டது. இந்த கடையில் நெடுங்காடு பொன்பற்றி கிராமத்தைச்சேர்ந்த பாஸ்கர் (வயது60). காவலாளியாக இருந்தார். நள்ளிரவு திடீரென கடைக்கு வந்த 2 மர்ம நபர்கள், கடையை திறக்குமாறு வற்புதியுள்ளனர். காவலாளி மறுக்கவே, மர்ம நபர்கள் காவலாளியை தாக்கி, கடையின் பூட்டை உடைத்து, உள்ளே சென்றனர். பின்னர் அங்கிருந்து ரூ.1 லட்சத்து 45 ஆயிரம் ரொக்கம் மற்றும் மதுபானங்களை திருடிகொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

    இது குறித்து, பாஸ்கர், கடை உரிமையாளர் மற்றும் திருநள்ளாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, கடை வாசலில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளைக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், திருநள்ளாறு அருகேவுள்ள விழிதியூரைச் சேர்ந்த ஜெகன் (23), நளன் குளம் பகுதியைச் சேர்ந்த தன்ராஜ் (21) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர், அவர்களிமிமிருந்து, ரூ.1 லட்சத்து 43 பணம் மற்றும் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். (சுமார் 2 ஆயிரம் மதிப்பிலான மதுபாட்டில்களை குடித்து விட்டதாக கூறப்படுகிறது. திருட்டு நடந்த ஒரு சில மணி நேரத்தில் குற்றவாளிகளை விரைந்து பிடித்த திருநள்ளாறு போலீசாரை, காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன் பாராட்டினார்.

    Next Story
    ×