என் மலர்
உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவிலில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலையத்தை சட்டப்பேரவை உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருகில் கலெக்டர் ரவிச்சந்திரன், ராஜா எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் உள்ளனர்.
சங்கரன்கோவிலில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலையத்தை சட்டமன்ற உறுதிமொழி குழுவினர் ஆய்வு
- ஆய்வின்போது கட்டிடங்களின் தரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
- பஸ் நிலையப் பணிகள் 9 மாதங்களுக்குள் முடிவடைந்து விடும்.
சங்கரன்கோவில்:
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் தலைமையில், சங்கரன் கோவிலில் புதிதாக கட்டப்பட்டு வரும் பஸ் நிலையத்தை உறுதி மொழிக்குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.
இதில் தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை செயலர் சீனிவாசன், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., டி.ஆர்.ஓ. பத்மாவதி, தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், உறுதி மொழிக்குழு உறுப்பினர்கள் அண்ணாதுரை, அருள், மோகன், ராமலிங்கம், வில்வநாதன், ஜெயகுமார், சதன் திருமலை குமார், ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு நடத்தினர்.
தொடர்ந்து கட்டிடங்களின் தரம் உள்ளிட்ட வைகள் குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது சட்டமன்ற உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் பேசுகையில், சங்கரன்கோவில் பஸ் நிலையப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 9 மாதங்களுக்குள் பணிகள் முடிவடைந்து விடும் என்றார்.
தொடர்ந்து நெல்லை நகராட்சி மண்டல இயக்குனர் விஜயலட்சுமி, சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி, நகராட்சி கமிஷனர் சபாநாயகம், பொறியாளர் எட்வின், ஒப்பந்ததாரர் விக்னேஷ் ஆகியோர்களிடம் தரமான முறையில் எதிர்காலத்தில் எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில் கட்டிட பணிகளை முறையாக நடக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வேல்முருகன் கேட்டுக்கொண்டார்.
ஆய்வில் நகராட்சி சுகாதார அலுவலர் பாலச்சந்தர் மற்றும் அரசு துறை அதிகாரிகள்பலர் கலந்து கொண்டனர்.