search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தருமபுரி ரெயில் நிலையத்தில்புதிதாக அமைக்கப்பட்ட லிப்ட்டு வசதி பயன்பாட்டுக்கு வருமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு
    X

    தருமபுரி ரெயில் நிலையத்தில்புதிதாக அமைக்கப்பட்ட லிப்ட்டு வசதி பயன்பாட்டுக்கு வருமா?-பொதுமக்கள் எதிர்பார்ப்பு

    • ஒரு லிப்ட்டு மட்டும் சோதனை முறையில் தற்காலிகமாக இயங்கி வருவதாக தெரிகிறது.
    • பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அந்த 2 லிப்ட்டுகளையும் திறக்கவில்லை.

    தருமபுரி

    ஆங்கிலேயேர் ஆட்சி காலத்தில் ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் தருமபுரியில் ரெயில்வே தடம் அமைத்து போக்குவரத்து வசதி ஏற்படுத்தினர்.

    தருமபுரி ரெயில்வே தடம் வழியாக டெல்லி, மும்பை, மாரட்டியம், கர்நாடகம் போன்ற வடமாநிலங்களில் இருந்து தென் தமிழகமான கன்னியாகுமரி வரையும், மேற்கு பகுதியான கோய முத்தூர், கேரளா வரையும் ரெயில் போக்குவரத்தை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்த தருமபுரி ரெயில் நிலையம் வடமாநிலங்களில் இருந்து தென் மாநிலமான தமிழகத்தை இணைக்கு ஒரு இணைப்பு பாலமாக அமைந்துள்ளது.

    காலப்போக்கில் சேலம் மாவட்டத்தில் இருந்து தருமபுரி தனி மாவட்டமாக பிரித்து அறிவிக்கப்பட்டது. இதனால் ரெயில்வே நிறுத்தமாக இருந்த தருமபுரியில் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட போது ரெயில்வே தடம் விரிவாக்கம் செய்யப்பட்டு ரெயில்நிலையம் புதுபொலி வுடன் புதுப்பிக்கப்பட்டது.

    இந்த ரெயில் நிலையத்தில் 3 பிளாட்பாரம் அமைக்கப்பட்டுள்ளது.

    தருமபுரி ரெயில் நிலையம் வழியாக தற்போது நாள்தோறும் 12 எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 6 பாசஞ்சர் ரெயில்களும், வாரந்தோறும் 8 சிறப்பு ரெயில்கள் உள்பட மொத்தம் 26 ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

    இந்த ரெயில் நிலையத்தில் 4 பிளாட்பாரத்தில் முதலாவது பிளாட்பாரத்தில் பெங்களூருவில் இருந்து தருமபுரி வரை வரும் 2 பாசஞ்சர் ரெயில்கள் மட்டும் நின்று செல்லும், மற்ற எக்ஸ்பிரஸ் ரெயில்கள், 4 பாசஞ்சர் ரெயில்கள் 2-வது பிளாட்பாரத்தில் நின்று செல்லும்.

    மற்ற 2 பிளாட்பா ரங்களில் வெளி மாநிலம், மாவட்டங்களில் இருந்து தருமபுரி மாவட்டத்திற்கு பொருட்களை ஏற்றி வரும் சரக்கு ரெயில்கள் நின்று பொருட்களை இறக்கி செல்வதற்காக பயன்படுத்த ப்பட்டு வருகிறது.

    அவ்வாறு 2-வது பிளாட்பாரத்தில் நிற்கக்கூடிய ரெயில்களில் பயணிகள் ஏறி செல்வதற்கு வசதியாக ஒரு நடைமேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் தான் வயதான முதியவர்களும், கர்ப்பிணி பெண்களும், குழந்தைகளும், மாற்றுத்திறனாளிகளும் படிகட்டுகளில் ஏறி சென்று 2-வது பிளாட்பாரத்தில் இறங்கி ரெயிலில் பயணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் ரெயில் நிலையத்தில் லிப்ட்டு வசதி ஏற்படுத்தி கொடுத்தால் படிகளில் ஏறி கஷ்டப்படும் பயணிகளுக்கு மிக வசதியாக இருக்கும் என்று பல்வேறு அமைப்பினர், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலமுறை தென் மண்டல ரெயில்வே கோட்டத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

    அவர்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கும் விதமாக நடைமேம்பாலத்தில் இருபுறமும் 2 லிப்ட்டுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த 2 லிப்ட்டுகள் கடந்த 2022-ம் ஆண்டு முடிவில் கட்டி முடிக்கப்பட்டது.

    ஆனால் இதுவரை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அந்த 2 லிப்ட்டுகளையும் திறக்கவில்லை.

    இதில் ஒரு லிப்ட்டு மட்டும் சோதனை முறையில் தற்காலிகமாக இயங்கி வருவதாக தெரிகிறது. அதிலும் பயணிகள் ஏறி 2-வது பிளாட்பாரத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

    2 லிப்ட்டுகளையும் முழுமையாக இயக்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×