search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி வள்ளலார் மைதானத்தில்  உலகப் புகழ்பெற்ற தி கிரேட் இந்தியன் சர்க்கஸ்
    X

    தருமபுரி வள்ளலார் மைதானத்தில் உலகப் புகழ்பெற்ற தி கிரேட் இந்தியன் சர்க்கஸ்

    • உலகப் புகழ் பெற்ற கலைஞர்களின் ஜிம்னாஸ்டிக், பின்புறம் உள்ள பொருளை திரும்பி பார்க்காமல் முகம் பார்க்கும் கண்ணாடியின் உதவியுடன் குறி தவறாமல் சுடும் துப்பாக்கி சூட்டிங் நடக்கிறது.
    • குதிரையின் மீது அமர்ந்து கொண்டு அழகி செய்யும் சாகசம் நடக்கிறது.

    தருமபுரி ,

    உலகப் புகழ் பெற்ற தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் கடந்த 30 ஆண்டுகளில் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட வெளிநாடுகளில் நடத்தப்பட்டுள்ளது.

    இந்த சர்க்கஸ் 5 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதருமபுரி வள்ளலார் மைதானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. இந்த சர்க்கஸை நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தொடங்கி வைக்கிறார்.

    இதுகுறித்து தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் மேலாளர்கள் வில்சன், நாசர் ஆகியோர் கூறுகையில், எங்களது சர்க்கஸ் ரஷ்யா, சீனா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் வல்லுனர்களால் பயிற்சி பெற்ற 100-க்கு மேற்பட்ட சர்க்கஸ் கலைஞர்கள் பங்கேற்று பல்வேறு சாகசங்களை நிகழ்த்துகிறார்கள்.

    குறிப்பாக அந்தரத்தில் பறக்கும் ரஷ்யன் அக்ரோ பெட், 80 அடி உயரத்தில் அழகிய பெண் நடனமாடும் ரஷ்யன் ரிங் பேலன்ஸ், பல வளையங்களை கால்களால் விளையாடும் விளையாட்டு, பெண்கள் கயிற்றை கொண்டு சாகசம் புரியும் விளையாட்டு மற்றும் எந்த சர்க்கஸிலும் இடம் பெறாத உலகப் புகழ் பெற்ற கலைஞர்களின் ஜிம்னாஸ்டிக், பின்புறம் உள்ள பொருளை திரும்பி பார்க்காமல் முகம் பார்க்கும் கண்ணாடியின் உதவியுடன் குறி தவறாமல் சுடும் துப்பாக்கி சூட்டிங், மரண கூண்டில் கலைஞர்கள் செய்யும் சாகச நிகழ்ச்சி, உயிரை பணயம் வைத்து அந்தரத்தில் அழகி தலைகீழாக நடக்கும் ஸ்கைவாக், பிடிமானம் ஏதும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கும் பேலன்ஸிங் டிரியிஸ், குதிரையின் மீது அமர்ந்து கொண்டு அழகி செய்யும் சாகசம், பிரேக் இல்லாத சைக்கிளில் முன் சக்கரம் தரையில் படாமல் தூக்கிக்கொண்டு ஓட்டுதல், ஹேண்ட் பாரில் அமர்ந்து பின்னோக்கி சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு சாகச நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    தினமும் மதியம் 1 மணி, மாலை 4 மணி, இரவு 7 மணி என 3 காட்சிகள் சர்க்கஸ் நடைபெற உள்ளது என்று கூறினர்.

    Next Story
    ×