என் மலர்
உள்ளூர் செய்திகள்

காரைக்கால் திருநள்ளாறில் கணவன் மது பழக்கத்துக்கு அடிமையானதால் மனைவி தற்கொலை
- நடராஜன் தினசரி மது அருந்திவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கமாக கொண்டுள்ளார்.
- ஊஞ்சல் கயிற்றில், மீனா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி:
காரைக்காலை அருகே திருநள்ளாறு அத்திபடுகை மேலத்தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 37). இவர், காரைக்கால் பொதுப்ப ணித்துறையில், என்.எம்.ஆர். ஆக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மீனா (35). இவர்களுக்கு வேதிகா (5) ஹர்சிதா (1) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.நடராஜன் தினசரி மது அருந்திவிட்டு வீட்டுக்கு செல்வது வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் நடராஜனின் மனைவி மீனா, தினசரி மது அருந்திவிட்டு வந்தால், எப்படி குடும்பம் நடத்துவது? இப்படியே நீ செய்தால் ஒரு நாள் தற்கொலை செய்து கொள்வேன் என கண்டி த்துள்ளார்.
சம்ப வத்தன்று பகல் வழக்கம் போல், நடராஜன் மது அருந்தி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார். மனைவி மீனா நடராஜனை கண்டி த்துள்ளார். அதை கண்டு கொள்ளாத நடராஜன் சாப்பி ட்டுவிட்டு உறங்கிவிட்டார்.மா லையில் நடரா ஜனுக்கு, மீனா டீ போட்டு கொடுத்து ள்ளார். அதை குடிக்க மறுத்து வெளியில் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் படுக்கை அறை உள் பக்கமாக தழ்பாழ்போ ட்டு இருந்தது. நடராஜன் கதவை தட்டினார் ஆனால் திறக்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த நடராஜன், கதவை உடைத்துகொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, ஊஞ்சல் கயிற்றில், மீனா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த நடராஜன் சப்தம் போட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்த்தினர் ஓடிவந்தனர்.
அவர்கள் உதவியுடன், மீனாவை மீட்டு திருநள்ளாறு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். அங்கு பரிசோதித்த டாக்கர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து, நடராஜன் திருநள்ளாறு போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.