search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கம்பம் அருகே வழக்கை வாபஸ் பெறக்கோரி தாய், மகள் மீது தாக்குதல்
    X

    கோப்பு படம்

    கம்பம் அருகே வழக்கை வாபஸ் பெறக்கோரி தாய், மகள் மீது தாக்குதல்

    • வழக்கை வாபஸ் பெறக்கோரி தாய், மகள் மீது தாக்குதல் நடத்தியதில் படுகாயமடைந்த அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    • கடலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து வாலிபரை செய்தனர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் 1வது வார்டு கோம்பை ரோடு பகுதியைச் சேர்ந்த வீரபத்திரன் மனைவி சபீனா (வயது 26). சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த ரோகித் என்பவர் பக்கத்து வீட்டு நாயை திருடிக் கொண்டு சென்றார்.

    இதைப் பார்த்த சபீனா இது குறித்து நாயின் உரிமையாளரிடம் தெரிவித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    ஆத்திரமடைந்த ரோகித் மற்றும் அவரது தாய் பேச்சியம்மாள் ஆகியோர் எங்கள் மீது போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கிறாயா என கேட்டு அவரை அடித்து கீழே தள்ளினர். இதை தடுக்க வந்த அவரது தாய் கனிமொழியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    படுகாயமடைந்த அவர்கள் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கம்பம் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    கடமலைக்குண்டு அருகே உள்ள கோவில்பாறை கிழக்குத் தெருவைச் சேர்ந்த அழகுமலை மனைவி மீனா (வயது 28). இவர்கள் குடும்பத்துக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாயவிதாகரன் (30) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்தது.

    இது குறித்து ஆண்டிபட்டி கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. சம்பவத்தன்று அழகுமலை வீட்டுக்கு வந்த மாயவிதாகரன் தன் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெறும்படி தெரிவித்தார். அதனை மறுக்கவே மீனா மற்றும் அவரது கணவரை அடித்து உதைத்து தாக்கினார். இது குறித்து கடலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து மாயவிதாகரனை செய்தனர்.

    Next Story
    ×