என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
பொங்கலூரில் தார் சாலை அமைக்க பூமி பூஜை
Byமாலை மலர்27 Feb 2023 12:14 PM IST
- மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பாலசுப்பிரமணியத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
- ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஊராட்சி பழனிச்சாமி நகர் பகுதியில், சாலை சில இடங்களில் மண் சாலையாக இருந்தது. இதனை தார் சாலையாக மாற்றித் தரும்படி அப்பகுதி மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பாலசுப்பிரமணியத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில், பொங்கலூர் ஊராட்சி நிதியின் மூலம் ரூ. 7 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் பழனிச்சாமி நகர் பகுதி முழுவதும் தார் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த விழாவிற்கு பொங்கலூர் ஊராட்சி மன்ற தலைவர் சத்யா பாலசுப்ரமணியம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், ஊராட்சி செயலாளர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
X